படைத்த கடவுளிருக்கப்
புரிந்த அருளிருக்கப்
பயமேது நெஞ்சினிலே
குறையேது உலகினிலே!
நிறைவான வளமிருக்க
நிலையான அறிவிருக்க
வறுமையேது நாட்டினிலே
பஞ்சமேது வீட்டினிலே!
வாழ வழியுமிருக்க
வயிறும் நிரம்பியிருக்க
உழைப்புண்டு பாரினிலே
உறுதியுண்டு மனதிலே!
சரீர பலமிருக்கச்
செளபாக்யம் தானிருக்க
உறுதியுண்டு மனதிலே
உறவுமுண்டு உலகிலே!
இல்லறம் தானிருக்க
இல்லாளும் உடனிருக்க
மகவுமுண்டு மகிழ்ச்சியே
மனதுமிங்கு நிறையவே!
யதார்த்த கவிதைகள்
காத்தான்குடி றுஷ்தா
Comments
Post a Comment