மனைவி என்பவள் படுக்கை மெத்தைக்காக மட்டுமல்ல
நம் கிரீடமும் அவளே
கணவன் என்பவன் தாலிக்கொடிக்காக மட்டுமல்ல
நம் கவசமும் அவனே
மேடை காட்சிகள் உன்னுடையது மேடை கால்கள் என்னுடையது
நாவிழந்து துதிபாடாதே
கோலம் அழகானதுதான் அலங்கோலம் ஆகாதவரை
நிழல்கள் நிஜத்தின் விம்பங்களே கடவுளும் மனிதனும் போல
பொது நலன் மறந்தோர் யுகம் வாழ்ந்தும் ஏது பலன்
நாகரீக உலகில் கரிசனைகள் பலவும் வெறும் கண்துடைப்பே
கண் அயர்த்திருப்பவர் யாவரும் தியானத்தில் இருப்பதில்லை
இராசிகள் துணைக்கொண்டு நட்சத்திரங்கள் கீறும் கோலம் ஜாதகம்
Comments
Post a Comment