சீருடை சித்தாந்தம் | யதார்த்த கவிதைகள்



எல்லோர்க்கும் அந்த 

துணிவு வருவதில்லை 

வருபவன் மட்டும்  அணிகிறான் 

சீருடை...


உயிருக்கு 

உத்தரவாதமில்லை .

இறப்புத் தொகை 

எண்ணிக்கையோடு நின்று போகும் 

என அறிந்தும் 

அணிவதுதான் சீருடை 

ஆனாலும் அணிந்தவனை 

மணப்பவள் அதைவிட 

துணிந்தவள் .


அரசு சொல்வதை 

அப்படியே செய்தல்  

இதன் சித்தாந்தம் 

வீரத்தோடு  விடை பெற்று 

வெற்றுடலோடு வீடு வரல் 

இதில்  சாதாரனம் 

ஆனாலும்  மரணம் 

மரியாதைக்குறியதுதான் 

போர்க்களத்தில் கேட்கும் 

ஒவ்வொரு  வேட்டு சப்தத்திலும் 

காதலி  நொடி நொடியாய் 

இறப்பாள். 

நொடி நொடியும் 

காதலனின் வீரம் மெச்சி 

மெய் சிலிர்ப்பாள்.



ரிசாந்தன்

Comments