பெண்ணாய்ப் பிறந்தவள் நான்.
பெண்ணவளின் பெருமையை பாரும் போற்றிட....
கவிகொண்டு வரைகிறேன் அவளின் மேன்மைதனை....
மகளிர் தினத்தில் மட்டுமல்ல...
மட்டில்லாத மங்களகர வார்த்தைகளால்...
பூவுலக பூமேடையில் என்றென்றும் போர்த்தப்பட வேண்டிய
பெருமைக்குரிய பேரருளடா இவள்.....
வீரம் போற்றும் ஆணின் பிறப்பிலும் பெண்மை...
கொஞ்ஞிக் குழைந்தாட பச்சிளம் மண் தேடிடும் அன்னையின் சிறப்பிலும் பெண்மை.....
அவள் மென்மையாய் இருப்பதால் என்னவோ...
ஒளிபாயா இருளிலும் சுடெரென மிளிருதடா
பேதையவளின் பெண்மை.....
கற்புக்கரசியாய்....
ஒவ்வோர் ஆணின் வாழ்க்கையின் வனப்பின் அரசியாய்...
வலம் வரும் குடும்பத்தின் குத்து விளக்கடா இவள்....
பெண்மையை போற்ற கவிவரைய தவிக்கிறேன்...
ஆனால் கவியால் வடித்திடாத சிற்பியால்
செதுக்கிடாத சிகரம் தொட்ட சின்னமடா இவள்....
என்றும் பெண்மை இனிதடா......
Comments
Post a Comment